ஃபேஷியல் செய்வதால் சருமத்துக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 08, 2024

Hindustan Times
Tamil

முகத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பேனி பராமரிக்க ஃபேஷியல் உதவுகிறது. இதை செய்வதால் சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படுகிறது

ரத்த ஓட்டம் அதிகரிப்பு, சருமத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்குதல் போன்ற பல நன்மைகள் ஃபேஷியல் செய்வதால் கிடைக்கின்றன

முகத்தில் ஏற்படும் அழுதத்தை குறைக்கிறது

முகத்தின் தசை பகுதிகளில் ஏற்படும் அழுத்தங்களை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. சருமத்துக்கு புத்துணர்வு அளித்து ஆற்றலை தருவதோடு, பதட்டத்தையும் குறைக்கிறது

ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

ஃபேஷியலின் போது தசைகளுக்கு மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம்  மேம்படுகிறது. சருமத்தை மிருதுவாக்கவும் மற்றும் வீக்கத்தை குறைக்கவும் செய்கிறது. சருமத்தின் நிறத்தை சீராக்கி, கொலஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது

சைனஸ் அழுதத்தை ஆற்றுப்படுத்துகிறது

சைனஸ் அழுத்தம், அசெளகரியம், நெரிசல் போன்றவற்றை ஆற்றுப்படுத்துகிறது. சளி வெளியேற்றத்தை ஊக்குவித்து, தலைவலியை குறைக்கிறது

சருமத்தின் நச்சுக்களை நீக்குகிறது

மாதத்துக்கு ஒரு முறை ஃபேஷியல் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள நச்சுக்கள் நீக்கப்படுகிறது. பருக்கள், செத்துப்போன செல்களையும் நீக்கி, கோடுகள் உருவாவதை குறைக்கிறது

வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது

சுருக்கங்களை போக்கி, சரும அமைப்பை சீராக்குகிறது. முகத்தை ரிலாக்ஸ் செய்து, வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது

தசையின் அடர்த்தியை பராமரிக்கிறது

திசுக்கள் சேதத்தை சரிசெய்து, தசை அடர்த்தியை பராமரிக்கிறது. முகத்தின் தசைகளில் ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரித்து சருமம் தளர்வு அடையாமல் பார்த்துகொள்கிறது 

பணம் சம்பாதிப்பதில் புரட்டி எடுக்க போகும் மகரம் ராசி! புரட்டாசி மாத ராசிபலன்கள்!