’உங்கள் காதலிக்கு எங்கே முத்தம் தர போகிறீர்கள்?’ 7 விதமான முத்தங்களும் அதன் அர்த்தங்களும்!
By Kathiravan V Feb 13, 2024
Hindustan Times Tamil
பிரஞ்சு முத்தம் (French kiss): இது காதலை வெளிப்படுத்தும் உணர்ச்சிமிக்க முத்தத்தின் ஒரு வடிவம். இது பொதுவாக ஒருவரையொருவர் ஆழமாக ஈர்க்கும் அல்லது ஆழமாக காதலிக்கும் நபர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
கழுத்து முத்தம் (Neck kiss): கழுத்தில் முத்தமிடுவது உடலுறவுக்கான நோக்கங்களை வெளிப்படையாக கூறுவதாக அமைகிறது. காதலில் ஒருவருக்கொருவர் ஆழ்ந்த ஆர்வமுள்ளவர்களால் இந்த முத்தங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
காது மடல் முத்தம் (Ear lobe kiss): உணர்வுப்பூர்வமான அன்பை வெளிப்படுத்த காது மடல்களில் முத்தம் இடுவதை காதலர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
கன்னத்தில் (On the cheek): ஒருவர் மீது நாம் கொண்டுள்ள பாசம் மற்றும் நெருக்கத்தை வெளிப்படுத்த கன்னத்தில் முத்தம் இடப்படுகிறது.
மூக்கு முத்தம் (Nose kiss): முத்தங்களின் அழகான வடிவங்களில் ஒன்று, இது காதலில் இருப்பவர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
நெற்றியில் முத்தம் (Forehead kiss): வாழ்கை துணை மீது நாம் கொண்டுள்ள மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக நெற்றியில் முத்தமிடப்படுகிறது. இது நாம் கொண்டுள்ள அன்பை அமைதியான முறையில் வெளிப்படுத்தும் செயலாக கருதப்படுகிறது.
கைகளில் முத்தம் (On the hands): காதல் உறவைத் தொடங்கும் தொடக்கமாக கைகளில் முத்தம் இடுதல் உள்ளது. பல கலாச்சாரங்களில் மரியாதை மற்றும் போற்றுதலின் அடையாளமாக செய்யப்படுகிறது.
பால் மற்றும் பாதாம் கலந்த பால் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்