காதலிக்க நேரமில்லை படம் மூலமாக பொங்கல் ரேசில் களமிறங்கி இருக்கும் கிருத்திகா உதயநிதி, தன்னுடைய பர்சனல் சார்ந்த விஷயங்கள் குறித்து பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்
By Kalyani Pandiyan S Jan 07, 2025
Hindustan Times Tamil
இது குறித்து அவர் பேசும் போது, ‘என்னுடைய மகனையும், மகளையும் எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. உதயநிதியே, அவர்களை ஆச்சரியமாக பார்க்கும் அளவிற்கு இந்த தலைமுறை மாறிவிட்டது.
அதை எப்படி கையில் எடுத்து கையாளப் போகிறோம் என்று தெரியவில்லை. கஷ்டமாகத்தான் இருக்கும்; அவர்களெல்லாம் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்து விட்டார்கள்.
அவர்களிடம் சென்று இதைச்செய்யாதே, அதைச்செய்யாதே என்று கூறினால், ஏன் என்னை கட்டுப்படுத்துகிறீர்கள் என்று கேட்கிறார்கள். உண்மையில் அதற்கான பதிலும் நம்மிடம் இல்லை. எங்கள் குடும்பத்திற்கென்று எந்த விதிகளும் கிடையாது. வேலை முடித்து வந்தால் வீட்டில் ஒன்றாக இருப்போம். அந்த நேரத்தில் என்ன எங்களால் திட்டமிட முடியுமோ, அதை திட்டமிட்டு சந்தோஷமாக இருப்போம்.
விமர்சனங்கள் குறித்து கேட்கிறீர்கள்.., விமர்சனங்கள் வரும்பொழுதுதான் அதை எடுத்துக் கொண்டு, அதிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு, முன்னேறிச் செல்ல முடியும்.
இந்த மாதிரியான விமர்சனங்கள் வரும் என்பதால்தான் உதயநிதி காதலை சொல்லும் பொழுதே, பிரபலங்களின் வீட்டில் எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று கூறினேன். ஆனால் வந்த பிறகு அதை எதிர்கொண்டு தானே ஆக வேண்டும்.
ஜனவரி 18ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..