குஷ்பு பேட்டி!
“எனக்கும் "டார்லிங்ஸ்", "பதாய் ஹோ" மற்றும் “க்ரூ” போன்ற கதைகளை தயாரிக்க விருப்பம்தான். ஆனால் துர்திஷ்டவசமாக, தென்னிந்தியாவில் அது போன்ற படங்களுக்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் போதுமான பார்வையாளர்கள் வருவதில்லை.
By Kalyani Pandiyan S Jun 01, 2024
Hindustan Times Tamil
அதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும். ஆகையால் எதிர்காலத்தில் நான் அது போன்ற திரைப்படங்களை தயாரிப்பேன். பதாய் ஹோ படமானது தமிழில் ரீமேக் (வீட்ல விஷேசம்) செய்யப்பட்டது. ஆனால் அந்தப்படம் சரியாக செல்ல வில்லை.
நீங்கள் ஒரு பெண்ணை திரையில் மோசமாக காட்ட வேண்டியதில்லை. அவளது உணர்ச்சிகள் ஒரு உறவில் காயப்படுவதையும், அது வாழ்க்கையின் ஒரு பகுதி என்றும் நீங்கள் முன் வந்து கூறத்தேவையில்லை. நான் அதனை ஆதரிக்கப்போவதும் இல்லை.
எனக்கு கமர்ஷியலான திரைப்படங்கள் எடுப்பது பிடிக்கும். மற்றபடி, நான் திரையில் போதனையெல்லாம் எடுக்கவெல்லாம் இங்குபடம் எடுக்க வர வில்லை. தற்போது தயாரிக்கப்படும் திரைப்படங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இன்னமும், கதாநாயகன் பெயரை வைத்துதான் படம் விற்பனை செய்யப்படுவதாகவும், அதில் கதாநாயகியின் பங்கு மிககுறைவு என்று நினைக்கும் ஹீரோக்கள் இருக்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு படத்தை கதாநாயகி முழுவதுமாக தன்னுடைய தோளில் தாங்கி கொண்டு செல்வது சிறப்பான விஷயம். ஆகையால் ஒரு வெற்றிப்படத்தை கொடுப்பதற்கு நீங்கள் கதாநாயகனை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.
இங்கு கதைதான் கதாநாயகன். இந்த மாற்றம் உண்மையில் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.”
நன்றி: பிடிஐ
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்