இந்தியாவில் திருமணமான பெண்கள் வாழ்க்கை முறையில் இருக்கும் சில வழக்கமான கலாச்சார நிகழ்வுகள் குறித்து கீர்த்தி சுரேஷ் JFW Binge யூடியூப் சேனலுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!
By Kalyani Pandiyan S Jan 03, 2025
Hindustan Times Tamil
இது குறித்து அவர் பேசும் போது, ‘ஒரு பெண் திருமணம் முடிந்து, இன்னொரு வீட்டுக்கு சென்று வாழ்ந்தால், அவள் மேற்படிப்பு படிக்கக்கூடாதா என்ன? பெண்களுக்கு வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் கல்யாணம் நடந்துவிடும்.. அதன் பின்னர் என்ன இருக்கிறது என்கிறார்கள்.
அந்தக்கேள்விக்கான அர்த்தம், அதற்கு பின்னர் அந்த பெண்ணுக்கு பெரிதாக வாழ்க்கை கிடையாது என்பது.அது இந்த சமூகமாக முடிவு செய்த விஷயம் தான். கலாச்சாரம் என்கிற பெயரில் உருவான விஷயம்; இது தனிப்பட்ட நபர்களின் தேர்வை பொருத்தது.
கல்யாணம் என்பது இந்த வயதில்தான் செய்து கொள்ள வேண்டும் என்ற வரைமுறையெல்லாம் கிடையாது. 40,50, ஏன் 60 வயதில் கூட கல்யாணம் செய்து கொள்ளலாம்.
இவ்வளவு ஏன் கல்யாணம் செய்து கொள்ளாமல் கூட இருக்கலாம்; அது அவரவர்களின் விருப்பம் சார்ந்தது.
சிலர் காலையில் தாமதமாக எழும் பெண்களை, இங்கேயே இப்படி தூங்கினால் மாமியார் வீட்டுக்குச் சென்றால் எப்படி காலையில் எழுந்து வேலைகளை செய்வாள் என்று கூறுவார்கள்.
அதற்கான பின்னணி என்னவென்றால் மாமியார் வீட்டுக்குச் சென்றாலே, பெண்தான் காலையில் எழுந்து எல்லா வேலையையும் கவனிக்க வேண்டும் என்பது;
அதற்காக, அந்த வேலைகளை ஆண்களும் கவனிக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை. அவர்கள் ஒரு பணியாள் வைத்துக்கொண்டு செய்யலாமே என்பதுதான்.’ என்று பேசினார்.
உடல் எடையை குறைக்க உதவும் ஜூஸை வீட்டிலேயே ஈசியா செய்வது எப்படி பாருங்க!