HT Exclusive: சினிமா, வெற்றி எனும் மேடையை, அதை விரும்பும் எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக அமைத்துக்கொடுத்து விடாது; அதற்கான காத்திருப்பும், அதை கைகொள்ள நாம் எடுக்கும் முயற்சிகளும் ஒரு தவத்தினை போன்றது. அதில் கிடைக்கும் அத்தனை அனுபவங்களும், நமக்கு பெரும் பாடங்கள்.
By Kalyani Pandiyan S Jul 19, 2024
Hindustan Times Tamil
இதில் சிலர் அந்த காத்திருப்பில் இருக்கும் போதே, ஜொலிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையைச் சேர்ந்தவர்தான் கார்த்திகை தீபம் சீரியல் ஆர்த்திகா. அந்த சீரியலில் இவர் நடித்து வரும் தீபா கேரக்டருக்கு, மக்களிடம் ஏக வரவேற்பு கிடைத்து வருகிறது. ரீல் லைஃபில் கனகச்சிதமாக வெற்றியை பிடித்திருக்கும் இவர், ரியல் லைஃபில், தான் 6 வருடங்களாக ஆசை, ஆசையாய் காதலித்த காதலன் கார்த்திக் ராஜையும் கரம் பிடித்து இருக்கிறார். அவருடன் உரையாடினேன். அப்போது அவர் கணவர் பற்றி பேசினார்.
நானும், கார்த்திக்கும் கிட்டத்தட்ட 6 வருஷம் லவ் பண்ணோம். இதுக்கிடையில சினிமா, சீரியல்ன்னு என்னோட வாழ்க்கை பாதையும் மாறிடுச்சு.. இந்த காலத்துல, நான் நிறைய பேர சந்திச்சு இருக்கேன். சிலர் என்கிட்ட லவ் ப்ரொபோஸூம் பண்ணிருக்காங்க…
ஆனா, கார்த்திக் என்ன புரிஞ்சி நடந்துகிட்ட மாதிரி, வேற யாரும் என்கிட்ட நடந்துக்கல..
என் கணவர் எனக்கு அவ்வளவு சப்போர்ட்டா இருக்கார். காதல்ல எல்லாத்தையும் விடவும், இருவருக்குமான புரிதல் ரொம்ப முக்கியம்..
அது நல்லா இருந்தாலே, நம்பிக்கை தானா வந்துரும். வார்த்தையால இல்லாம, உண்மையாவே ஒருத்தருக்கொருத்தர் மரியாதை கொடுத்துக்குறதும், ரொம்ப முக்கியமான விஷயம்னு நினைக்கிறேன்." என்று பேசினார்.
இந்து மதத்தில் மங்களகரமான நாளாக கருதப்படும் அட்சய திருதியை இந்த ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் நீராடி, தானம், தவம், வழிபாடு ஆகியவை வற்றாத புண்ணியத்தைத் தரும் என்று கூறப்படுகிறது