நீங்கள் தம்பதியாக இருக்கும் பட்சத்தில், ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்ள வேண்டும். அதேபோல ஒருவருக்கொருவர் அவரவருக்கான ஸ்பேசை கொடுக்க வேண்டும்.  - ஜோதிகா -  ( நன்றி கலாட்டா)

By Kalyani Pandiyan S
Apr 02, 2024

Hindustan Times
Tamil

உங்களுக்கு இடையே ஒரு விதமான நட்பு இருக்க வேண்டும். இந்த 4 விஷயங்கள் உங்கள் உறவில் இருக்குமானால், இன்ன பிற விஷயங்களை இதுவே சமன்படுத்தி விடும்.எங்களுக்கு இடையேயான காதல் இந்த நான்கு விஷயங்களால்தான் நடந்தது.

நானும்,சூர்யாவும் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வோம். மரியாதை கொடுப்போம். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், எங்களுடைய ரிலேஷன்ஷிப்பில் ஆண் (சூர்யா) தரப்பிலிருந்து அதிகமான மரியாதையும், அதிகமான பாராட்டுதலும் வருகிறது. 

கிட்டத்தட்ட ஒரு 80 சதவீத பெண்கள் கணவன்மார்களிடம் மிகவும் மரியாதையுடனேயே நடந்து கொள்கிறார்கள்.  ஆனால் அது ஒரு ஆண் தரப்பில் இருந்து அதிகமாக வரும் பொழுது அது பெரிய விஷயமாக இருக்கிறது.

என்னுடைய திரைபயணத்தில், நான்தான் திரைப்படங்களிலிருந்து விலக வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி நடந்தேன். 

என்னுடைய இந்த பயணத்தில் நான் எடுத்த முடிவுகளுக்கு சூர்யா உறுதுணையாக இருந்திருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, ரிலேஷன்ஷிப்பில் ஒருவருக்கொருவர் கொடுக்கக்கூடிய மரியாதை, பாராட்டுதல், ஸ்பேஸ் ஆகியவையே, அந்த காதலை மிகவும் நீண்ட தூரம் எடுத்துச் செல்லும்

சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் நெய் சாப்பிடலாமா?