மும்பை போட்டியை காண வந்த ஜூனியர் பும்ரா

By Pandeeswari Gurusamy
May 08, 2024

Hindustan Times
Tamil

எஸ்ஆர்எச் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை காண சிறப்பு விருந்தினர் ஒருவர் மைதானத்திற்கு வந்தார்.

எம்ஐ வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் மகன் தனது தாயுடன் அமர்ந்து போட்டியைப் பார்த்தார்.

பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் திங்கள்கிழமை நடந்த போட்டியைக் காண வான்கடே மைதானத்திற்கு வந்தார்.

அவரது மகன் அங்கத்தும் மடியில் அமர்ந்து போட்டியை பார்த்தார்.

ஜூனியர் பும்ராவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அங்கத் மும்பை இந்தியன்ஸ் ஜெர்சி அணிந்தும் போட்டியை பார்த்தார் என்பது சிறப்பு.

அங்கத் 4 செப்டம்பர் 2023 அன்று பிறந்தார். இந்த ஜோடி மார்ச் 2021 இல் திருமணம் செய்து கொண்டனர்.

பும்ராவின் மனைவி சஞ்சனாவின் பிறந்தநாள் திங்கட்கிழமை.

மீன்