வயிற்றில் உள்ள கொழுப்புகளை, தொப்பையை இயற்கையான முறையில் குறைக்க உதவும் ஜூஸ்கள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 27, 2024

Hindustan Times
Tamil

இயற்கையாகவே தொப்பை கொழுப்பை கரைப்பது சீரான உணவு,உடற்பயிற்சியை  வழக்கமாக்கி கொள்வது, நீரேற்றத்துடன் இருப்பது போன்றவற்றின் மூலமும் ஆதரிக்கப்படுகிறது

உங்களது டயட்டில் சில் ஜூஸ் வகைகளை தவறாமல் சேர்த்துக்கொள்வதன் மூலம் தொப்பை கொழுப்பை எளிதாக குறைக்கலாம்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மிக்க பச்சை காய்கறிகள், பழங்களின் ஜூஸ்களை பருகலாம். கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை போன்றவற்றில் ஜூஸ் தயார் செய்து பருகலாம் இவை வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதோடு, கொழுப்பு கரைக்கவும் உதவுகிறது

எலுமிச்சை மற்றும் வெள்ளரி ஜூஸ். குறைவான கலோரி கொண்ட வெள்ளரியி, அதிகப்படியான நீர்ச்சத்து உள்ளது. இதன் மூலம் நீங்கள் நீரேற்றத்துடன் இருக்கலாம். எலுமிச்சை வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, செரிமானத்துக்கு உதவுகிறது

பைனாப்பிளில் இருக்கும் ப்ரோமெளனின் என்கிற நொதிகள் செரிமானத்துக்கு உதவுவதுடன், வீக்கத்தை குறைக்கிறது. இதன் மூலம் கொழுப்புகளும் கரைகின்றன

தர்ப்பூசணியில் அமினோ அமிலங்கள், அர்ஜினைன் இடம்பிடித்துள்ளன. இது உடலில் இருக்கும் கொழுப்புகளை குறைக்க உதவுகிறது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கிரான்பெர்ரி உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது. இதன் மூலம் உடலின் கொழுப்புகளும் கறைகின்றன

மாரடைப்பை தடுக்கும் நட்ஸ்