இதய ஆரோக்கியத்திற்கு உதவும் உப்பு இல்லாத சிற்றுண்டிகள் குறித்து பார்க்கலாம்
Image Credits: Adobe Stock
By Divya Sekar Feb 07, 2025
Hindustan Times Tamil
சுவையூட்ட உப்பு சேர்த்த உணவுகளை சாப்பிடுவதால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படும். இதயத்திற்கு குறைவான சோடியம் கொண்ட உணவுகள் நல்லது. குறைவான சோடியம் கொண்ட சிற்றுண்டிகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
Image Credits: Adobe Stock
நட்ஸ், விதைகள் : பாதாம், அக்ரூட் பருப்புகள், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றை தினமும் ஒரு சாப்பிட வேண்டும். இவை இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்குகின்றன. இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. இவற்றில் சோடியம் குறைவாக இருக்கும்
Image Credits: Adobe Stock
சியா விதைகள் : சியா விதைகள், பால் சேர்த்து சாப்பிடுவதால் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதை சியா புட்டிங் என்று அழைக்கிறார்கள். சியா புட்டிங்கில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதம் அதிகமாக உள்ளது. இது எடை இழப்புக்கு, இதய பாதுகாப்புக்கு உதவுகிறது.
Image Credits: Adobe Stock
வேகவைத்த முட்டைகள் : புரதம், வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்புகளுக்கு சிறந்த மூலமாக வேகவைத்த முட்டைகள் உள்ளன. இவற்றில் சோடியம் குறைவாக இருக்கும். ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க இது நல்லது.
Image Credits: Adobe Stock
மக்கானா : இந்த கிரிஸ்பி சிற்றுண்டியில் சோடியம் குறைவாக இருப்பது மட்டுமல்லாமல், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, புரதங்களாலும் நிறைந்துள்ளது. வறுத்த மக்கானா சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது
Image Credits: Adobe Stock
பாதாம் பட்டர் சேர்த்த ஆப்பிள் : ஒரு தேக்கரண்டி பாதாம் பட்டர் சேர்த்த புதிய ஆப்பிள் துண்டுகள் சுவையாக இருக்கும். உங்களுக்கு நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதிலிருந்து நிறைய கிடைக்கும். இது திருப்திகரமான சிற்றுண்டி.
Image Credits: Adobe Stock
வேகவைத்த இனிப்பு உருளைக்கிழங்கு துண்டுகள் : இனிப்பு உருளைக்கிழங்கில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, அவை இதயத்திற்கு ஆரோக்கியமான தின்பண்டங்கள். அவை சோடியம் குறைவாக இருப்பதால் இதயத்திற்கு நல்லது
Image Credits: Adobe Stock
பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பருப்புகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. ஆனால் அதே போல நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சத்துக்கள் அனைத்தும் வேர்க்கடலைகளிலும் இருக்கின்றன