2024இல் இஸ்ரோ சார்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் மிஷன் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Dec 17, 2023
Hindustan Times Tamil
2023ஆம் ஆண்டு இஸ்ரோவுக்கு வெற்றிகரமான ஆண்டாக உள்ளது. சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் இறங்கி பரிசோதனை மேற்கொண்டதை உலகம் முழுவதும் இருக்கும் கோடானு கோடி இந்தியர்களும் கொண்டாடி மகிழந்தனர்
சந்திரயான் 3 போல் 2024இல் ஏராளமான மிஷன்களை செயல்படுத்தவுள்ளது இஸ்ரோ. அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்
ககன்யான் மிஷன். மனிதர்களை சுமந்து செல்லும் இந்தியாவின் விண்வெளி வாகனமாக ககன்யான் இருக்கிறது. இஸ்ரோ தனது முதல் ககன்யான் பரிசோதனையை 2024இல் நடத்தவுள்ளது
மங்கல்யான் 2 மிஷன். செவ்வாய் கிரகத்தின் தன்மையை ஆராய்வதற்காகவும், அதன் வளிமண்டல நிலவரத்தை புரிந்து கொள்ளும் பணிகளையும் இது மேற்கொள்கிறது
நிசார் மிஷன். நாசாவுடன் கைகோரத்து இந்தியா மேற்கொள்ளும் மிஷனாக நிசார் உள்ளது
நிசார் மிஷன் மூலம் இரண்டு வெவ்வேறு ரேடார் அதிர்வெண்களை பயன்படுத்தி பூமியை முறையாக கண்காணிக்கப்படும்
சுக்ரயான் 1 மிஷன். வெள்ளி கிரகத்தை கண்காணிக்கும் விதமாக இந்த மிஷன் உள்ளது. சூரிய குடும்பத்தில் தகதகவென மிண்ணும் கிரகமாக இருந்து வரும் வெள்ளியின் நிலத்தடி மர்மங்களை ஆராய்வதே நோக்கம்
இன்சாட் 3டிஎஸ். இயற்கை பேரழிவு மற்றும் வானிலை நிகழ்வுகளை கணிக்க உதவும் மேம்பட்ட வானிலை ஆய்வுக்காக இந்த செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது
இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய டாப் 5 நாடுகளை எவை என்பதை பார்க்கலாம்