Benefits of Rainwater Bath : மழை நீரில் குளிப்பது உங்களுக்கு நல்லதா? கெடுதலா?

Pexels

By Pandeeswari Gurusamy
Jun 03, 2024

Hindustan Times
Tamil

மழையில் நனைந்தால் சளி பிடிக்கும் என்று வீட்டில் பெரியவர்கள் திட்டுவார்கள். ஆனால் மழையில் நனைந்தால் உண்மையில் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் மழையில் நனையும்போது கிடைக்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Pexels

மழைநீரில் குளிப்பது உடலுக்கு புத்துணர்வைத்தரும். உங்கள் உடலை நச்சு வேதிப்பொருட்களிடம் இருந்து சுத்தம் செய்யும். மழைநீர் தூசி, மாசுக்களை உங்கள் சருமத்தில் இருந்து நீக்கும். அது உங்களுக்கு புத்துணர்வைத்தரும். மழைநீரின் குளுமை உங்கள் சருமத்தின் வெப்பநிலையை கோடைக்காலங்களில் குறைத்து, வெப்பம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து உங்களைக் காக்கும்.

Pexels

மழை நீரில் அமிலத்தன்மை குறைவு. மழைநீர் இயற்கையில் மிருதுவாக இருக்கும். அதில் மினரல்களும், வேதிப்பொருட்களும் குறைவு. இதனால், உங்கள் சருமம் மற்றும் தலைமுடியில் இயற்கை எண்ணெயை தக்கவைக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் கடுமையான குளியல் பொருட்களுக்கு சிறந்த மாற்றாக உள்ளது. மழைநீரில் உள்ள நுண்ணுயிர்கள், மனித உடலில் வைட்டமின் பி 12 உற்பத்தியை அதிகரிக்கும். உடலில் ஆரோக்கியமான செல்களின் வளர்ச்சியை உயர்த்துகிறது. சருமத்தில் நீர்ச்சத்தை அதிகரித்து, சரும எரிச்சல் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

உங்கள் சருமத்திற்கு மழைநீர் மிகவும் அவசியம். அது உங்கள் மனநிலைக்கும் நல்லது. உங்கள் முகத்தில் விழும் ஒவ்வொரு துளி மழையும் உங்களை அமைதிப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதால், அது உங்களின் மனதை அமைதிப்படுத்தும். மழைத்துளி உங்கள் உடலில் விழுவது, உங்கள் உடலில் சில ஹார்மோன்கள் வெளியாவதற்கு காரணமாகிறது. குறிப்பாக எண்டோர்ஃபின்கள் மற்றும் செரோட்டினின்கள் உருவாகிறது. இவை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்கள் ஆகும். இதனால் இயற்கையிலேயே உங்களின் கவலைகள் நீங்கி உங்கள் மனம் அமைதிகொள்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கிறது.

Pexels

மழையில் நனைவதால், உங்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி ஏற்படுவதில்லை. மழையில் முக்கியமான ஒரு நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் பண்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். மழைத்துளியில் எதிர்மறை அயான்கள் உள்ளன. அவை, உங்கள் சருமத்துடன் தொடர்புகொள்ளும்போது, அது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் நேர்மறையான பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. இந்த அயான்கள், வெள்ளை அணுக்களின் இயக்கத்தை அதிகரித்து உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, தொற்றுகளுக்கு எதிராக பாடுபடுகின்றன.

Pexels

மழைக்காலத்தில் வெறும் கருமேகங்கள் சூழ்ந்தே காணப்படலாம். ஆனால், அப்போது நீங்கள் வெயிலில் இதமாக வெளியே செல்ல முடியும். ஏனெனில் சூரியனின் கடுமையான தாக்குதலுக்கு ஆளாக வேண்டியதில்லை. மழையில் நீங்கள் குளிக்கும்போது, உங்கள் சருமம் இயற்கையான ஒளியை உள் வாங்குகிறது.  மேலும் உங்கள் உடல் வைட்டமின் டியை உற்பத்தி செய்ய அனுமதிக்கறிது. வைட்டமின் டி உங்கள் உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு நல்லது. எனவே உங்கள் மனநிலையை மாற்றும், நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

Pexels

சரும நிபுணர்களின் கூற்றுப்படி, மழையில் குளிப்பது உங்கள் சருமத்தில் உள்ள ராஷ்களை நீக்குகிறது. கோடை காலத்தில் ஏற்படும் சரும வியாதிகளையும் குணப்படுத்துகிறது. கோடை காலத்தின் சரும வறட்சியைப் போக்கவும், உங்கள் உடல் வெப்பலையை சீராக்கவும் மழையில் குளிப்பது உதவுகிறது. வியர்வை, உடல் சூடு ஆகியவற்றையும் தணிக்கிறது. மழைநீரின் குளுமை, ரத்த நாளங்களை சீரமைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் உடல் முழுவதும் நன்மை கிடைக்கிறது. இது ரத்த ஓட்டத்தில் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு நல்லது. உடலில் அனைத்து பாகங்களுக்கு சீராக ரத்தம் பாய்ந்தால்தான், உடல் முழுவதுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் செல்லும்.

தலை முதல் பாதம் வரை உடல் முழுவதும் நனையவேண்டும். அது கொட்டும் மழையாக இருக்க வேண்டும். சாரல் மழையாக இருக்கக்கூடாது. முதலில் வரும் மழையில் நனையக்கூடாது. சிறிது நேரம் சென்றபின் நனையவேண்டும்.

Pexels

மலச்சிக்கல்