பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான நேற்றைய மேட்ச்சில் சதம் விளாசியதும் ரசிகர்களை நோக்கி காகிதம் ஒன்றை காண்பித்தார் SRH வீரர் அபிஷேக் சர்மா
By Manigandan K T Apr 13, 2025
Hindustan Times Tamil
அந்த காகிதத்தில் 'இந்த சதம் ஆரஞ்சு ஆர்மிக்காக' என எழுதப்பட்டிருந்தது. தொடர் தோல்வியால் துவண்டிருந்த SRH க்கு நேற்றைய வெற்றி முக்கியமானதாகும்.
பஞ்சாப் கிங்ஸ் 245 ரன்கள் குவித்து பெரிய இலக்கை நிர்ணயித்த போதிலும் அதை தங்களது அபாரமான ஆட்டத்திறனால் சேஸிங் செய்து எட்டியது SRH
55 பந்துகளில் 141 ரன்கள் விளாசி அதிரடி கிளப்பிய அபிஷேக் சர்மா தான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவர் நேற்றைய மேட்ச்சில் 10 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
பஞ்சாப் நிர்ணயித்த 246 ரன்கள் என்ற இலக்கை 9 பந்துகள் மீதமிருந்த நிலையில் எட்டிப்பிடித்து சாதித்தது ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச சேஸிங் ஆகும்.
கடந்த ஆண்டு கொல்கத்தாவுக்கு எதிரான மேட்ச்சில் பஞ்சாப் கிங்ஸ் 262 ரன்கள் இலக்கை சேஸிங் செய்ததே இந்த வகையில் அதிக பட்சமாக இருக்கிறது.
நேற்றைய மேட்ச்சில் டிராவிஸ் ஹெட் அரை சதம் விளாசி அசத்தினார். புள்ளிப் பட்டியலில் SRH 8வது இடத்தில் இருக்கிறது.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் டெல்லியும், இரண்டாவது இடத்தில் குஜராத்தும் உள்ளன.
கோடை காலத்தில் சில எளிய டிப்ஸ்களை பின்பற்ற சருமத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். சருமத்தை பேனி காக்க உதவும் சில எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்