திடீரென ஏற்படும் ரத்த அழுத்தம் அதிகரிப்பை விரைவாக குறைக்க உதவும் பானங்கள் எவை என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jul 24, 2024
Hindustan Times Tamil
தமனி சுவர்களுக்கு எதிரான ரத்தத்தின் விசை அதிகமாக இருக்கும்போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது
ரத்த அழுத்தத்தை சரியாக கவனிக்காவிட்டால் இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்
ஹைப்பர் டென்ஷன், உயர் ரத்த அழுத்தம் பாதிப்புக்கான சிறந்த பாதுகாப்பு நடவடிக்கையாக நாம் பின்பற்றும் டயட் முறை இருந்து வருகிறது
சில பானங்கள் தொடர்ச்சியாக சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிப்பை குறைப்பதுடன், கட்டுக்குள் வைக்கலாம்
தக்காளி ஜூஸ் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் ரத்த அழுத்த அளவை மேம்படுவதை கட்டுப்படுத்துகிறது. அத்துடன் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைக்கிறது
மாதுளை ஜூஸ் பருகுவதனாலும் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் ரத்த அழுத்த அளவை வெகுவாக குறைக்கலாம்
டயட்ரி நைட்ரேட் அதிகமாக நிரம்பியிருக்கும் பீட்ரூட் ரத்த அழுத்ததை குறைக்க உதவுகிறது
கிரான் பெர்ரி அல்லது செர்ரி பழங்களின் ஜூஸ்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி சீராக்க உதவுகிறது
கொழுப்பு குறைவான பால், யோகர்ட் போன்றவை ஹைபர் டென்ஷனை குறைக்கும் பால் சார்ந்த பொருள்களின் டயட்டாக உள்ளது
நீண்ட காலம் பிளாக் அல்லது க்ரீன் டீ பருகி வந்தால் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் ரத்த அழுத்தமானது குறையும் என கூறப்படுகிறது
காலையில் ஒரு கப் பப்பாளி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?