நாளைய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் இந்தோஷிய பிரதமர்! இவ்வளவு முக்கியத்துவம் ஏன்?

By Kathiravan V
Jan 25, 2025

Hindustan Times
Tamil

குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ இந்தியா வந்து உள்ளார்

ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தினவிழாவில் வெளிநாட்டை சேர்ந்த தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது மரபு.

இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளும் நான்காவது இந்தோனேசிய தலைவர் என்ற பெருமையை பிரபோவோ சுபியாண்டோ பெற்றுள்ளார். இதற்கு முன்னர் 1950 ஆம் ஆண்டு முதல் குடியரசு தினத்தில் ஜனாதிபதி சுகர்னோ தலைமை விருந்தினராக இருந்தார்.

இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோர் இணைந்து புது தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறி கொண்டனர்

உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை பிரபோவோவின் வருகையின் போது முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளாக உள்ளது.

குடியரசு தின அணிவகுப்பில் இந்தோனேஷியாவின் ஆயுதப் படையைச் சேர்ந்த 52 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்க உள்ளனர். இந்தோனேசியக் குழுவினர் வெளிநாட்டில் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்பது இதுவே முதல் முறை

ஆச்சே மற்றும் அந்தமான் தீவுகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்துவதற்கு இந்த சந்திப்பு உதவும் என்பது அரசியல்நோக்கர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

இந்தியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளின் இடையே நடந்த இருவழி வர்த்தகத்தின் மதிப்பு கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் 29.40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

முடி மற்றும் சரும ஆரோக்கியத்துக்கான 5 பயோட்டின் நிறைந்த உணவுகள்

Image Credits: Adobe Stock