இந்தியாவுடன் ’லே’ பகுதியை இணைக்கும் சுரங்கபாதையை திறந்த மோடி! புகழ்ந்து தள்ளிய உமர் அப்துல்லா!

By Kathiravan V
Jan 13, 2025

Hindustan Times
Tamil

காஷ்மீரில் சோனாமார்க் பகுதியை இணைக்கும் இசட்-மோர்ஹ் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

கந்தர்பால் மாவட்டத்தில் ககங்கீர் மற்றும் சோனாமார்க் பகுதிகளை இணைக்கும் 6.5 கி.மீ நீளமுள்ள இருவழி சுரங்கப்பாதை ரூ .2,700 கோடி செலவில் கட்டப்பட்டது. 

கடல் மட்டத்திலிருந்து 8,650 அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள சோனாமார்க் பகுதி பனிப்பொழிவு காலத்தில் யாரும் செல்ல முடியாது என்ற நிலை இருந்தது. அப்பகுதிக்கு செல்லும் பாதைகளை பனி மறைப்பதால் சோனாமார்க் பகுதி தகவல் தொடர்புகளில் இருந்து துண்டிக்கப்பட்ட பகுதியாக இருந்து வந்தது. 

தற்போது அமைக்கப்பட்டு உள்ள இசட்-மோர் சுரங்கப்பாதை ஸ்ரீநகர் மற்றும் சோனாமார்க் இடையே ஆண்டு முழுவதும் பயணம் செய்யும் வசதியை ஏற்படுத்தும். 

மேலும், நிலச்சரிவு பாதிப்புக்குள்ளான மற்றும் பனிச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து ’லே’ பகுதிக்கு செல்லும் பாதையை எளிதாக்கும்.

சோனாமார்க் சுரங்கப்பாதை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், "நமது ஜம்மு-காஷ்மீர் சுரங்கப்பாதைகள், பாலங்கள் மற்றும் ரோப்வேகளின் மையமாக மாறி வருகிறது. உலகின் மிக உயரமான சுரங்கப்பாதை இங்கு கட்டப்படுகிறது. உலகின் மிக உயரமான ரயில் பாலம் கட்டப்படுகிறது. செனாப் பாலத்தின் பொறியியலைப் பார்த்து உலகமே வியப்பில் ஆழ்ந்தது உள்ளது” என கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கியத் தலைவரும், காஷ்மீர் முதலமைச்சருமான உமர் அப்துல்லா கூறுகையில், "சர்வதேச யோகா தினத்தன்று ஸ்ரீநகரில் நடந்த உங்கள் நிகழ்ச்சியில் 3 முக்கியமான விஷயங்களைச் சொன்னீர்கள். ஜம்மு காஷ்மீர் மக்களிடம் மிக விரைவில் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும், மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தங்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் நீங்கள் கூறியிருந்தீர்கள். நீங்கள் உங்கள் வார்த்தையைக் காப்பாற்றிவிட்டீர்கள், 4 மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்படு உள்ளன" என பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார். 

ஸ்ரீநகர் மற்றும் சோனாமார்க் இடையே லே வரை செல்லும் இந்த சாலைத்திட்டம் நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு வழிகளைத் தவிர்த்து, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த லடாக் பகுதிக்கு பாதுகாப்பான மற்றும் தடையின்றி செல்வதை உறுதி செய்கிறது. 

நரைமுடி, வழுக்கை ஏற்படுவதை தடுக்கும் கருவேப்பிலை தலைமுடி பராமரிப்புக்கான சிறந்த மூலிகையாகவும் திகழ்கிறது