3 நாட்களில் சென்செக்ஸ் 2,000 புள்ளிகள் சரிவு

By Manigandan K T
Dec 18, 2024

Hindustan Times
Tamil

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைவதற்கான காரணி என்னவாக இருக்கும்?

டிசம்பர் 18, புதன்கிழமை, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 இரண்டும் இன்ட்ராடே வர்த்தகத்தின் போது 0.80 சதவீதம் சரிந்தன.

அனைத்து கண்களும் இன்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் கொள்கை முடிவில் உள்ளன. இதுவே முக்கிய காரணியாக கருதப்படுகிறது

பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனமயமாக்கல் டிசம்பர் 13, வெள்ளிக்கிழமை சுமார் 459 லட்சம் கோடியிலிருந்து கிட்டத்தட்ட 452 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது

பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் புதன்கிழமை நஷ்டத்தை சந்தித்தன

நிஃப்டி மீடியா குறியீடு 2 சதவீதத்துக்கும் அதிகமாகவும், நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடு 2 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன

நிஃப்டி பேங்க், பைனான்சியல் சர்வீசஸ், பிரைவேட் பேங்க் மற்றும் மெட்டல் இன்டெக்ஸ் ஆகியவை தலா 1 சதவீதத்திற்கும் அதிகமான இழப்பை சந்தித்தன

பழங்களை ஜூஸாக பருகினாலும், அப்படிய சாப்பிட்டாலும் என்னென்ன நன்மைகள் பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்