தேனி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது தான். இதுவரை மதுரையில் இருந்துக் டீசல் என்ஜின் ஆக இயக்கப்பட்டு வந்த ரயில் முழுவதுமாக மின்சார என்ஜின் ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.
By Suguna Devi P Feb 08, 2025
Hindustan Times Tamil
போடி மதுரை ரயில் மின்மயமாக்கப்பட்டதால் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்-போடி எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை வரை மின்சார இஞ்சின் ரயிலாக வந்து பின்னர் டீசல் இஞ்சினுக்கு மாற்றப்படும். இதற்கு ஒரு மணி நேர கால தாமதமாவதால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
Wikipedia
சென்னையிலிருந்து தேனி & போடி வரை ரயில் இருந்தும் மக்கள் அதை விரும்பாமல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறங்கி தேனிக்கு பேருந்தில் சென்று நேரத்தை மிச்சப்படுத்துவது அவல கதையாக தொடர்ந்தது.
தற்போது மதுரை போடி இடையிலான ரயில் பாதை முற்றிலுமாக மின்மயமாக்கப்பட்டதால் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு ரயிலின் வேகமும் அதிகரித்துள்ளது. இந்நடைமுறை பிப்ரவரி 10 முதல் அமலுக்கு வருகிறது.
IndianRailInfo
சென்னை சென்ட்ரல்-போடி அதிவிரைவு வண்டியைப் பொறுத்தவரையில் மதுரை வந்தடையும் வரை எந்த நேரமாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல் போடியிலிருந்து இரவு 8:30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 8:50 ற்கு புறப்படும்.
மதுரை-போடி பயணிகள் ரயிலை பொறுத்தவரையில் மதுரையிலிருந்து காலையில் அதே 8:20 மணிக்கு புறப்பட்டு 15 நிமிடங்கள் முன்னதாக 9:28 மணிக்கே தேனி சென்றடைகிறது.
மறுமார்க்கமாக போடியிலிருந்து மாலை 5:50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 6 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில் நேர மாற்றத்தால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். மேலும் இதன் மூலம் தேனிக்கு செல்ல விரும்பும் வேறு மாவட்ட மக்களுக்கும் இது பெரும் அளவில் உதவும். அதிக சுற்றுலா தளங்களை கொண்ட தேனிக்கு இது சிறப்பான வசதியாக்கும்.
பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பருப்புகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. ஆனால் அதே போல நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சத்துக்கள் அனைத்தும் வேர்க்கடலைகளிலும் இருக்கின்றன