RCB vs CSK போட்டிக்குப் பிறகு ஊதா தொப்பி பட்டியல் எவ்வளவு மாறியுள்ளது?
By Manigandan K T May 04, 2025
Hindustan Times Tamil
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிரசித் கிருஷ்ணா 10 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் எடுத்து 7.48 எக்கனாமியுடன் முதலிடத்தில் உள்ளார். இவரிடம் தான் ஊதா தொப்பி உள்ளது.
ஜோஷ் ஹேசில்வுட் 10 போட்டிகளில் 8.44 எக்கனாமியுடன் 18 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்
சென்னை சூப்பர் கிங்ஸ் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது 8.05 எக்கனாமியுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் 16 விக்கெட்டுகளை இதுவரை இந்த சீசனில் கைப்பற்றி இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் 11 போட்டிகளில் 8.80 எக்கனாமியுடன் 16 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்
க்ருனால் பாண்டியா 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகளுடன் 8.57 எகானமி ரேட்டுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்
மிட்செல் ஸ்டார்க், கலீல் அகமது மற்றும் முகமது சிராஜ் ஆகியோரும் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர், ஆனால் அவர்கள் தங்கள் எகானமி ரேட்டால் முதல் ஐந்து இடங்களில் இல்லை
பஞ்சாப் கிங்ஸ் அணியின் அர்ஷ்தீப் சிங் 10 விக்கெட்டுகளுடன் ஊதா தொப்பி பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறார்.
ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.