தன்னுடைய முந்தைய திரைப்படங்களில் எழுத்தாளர் சுஜாதாவுடன் இயக்குநர் ஷங்கர் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில், 2008ம் ஆண்டு சுஜாதா மறைந்த பின்னர் பிற எழுத்தாளர்களுடன் பணியாற்ற ஆரம்பித்தார். ஆனாலும், சுஜாதாவுடன் கைகோர்த்து பணியாற்றிய போது, அவரது படங்களில் இருந்த டச்.. இப்போது இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த ஷங்கர் கொடுத்த பேட்டியில் சுஜாதாவுடன் தான் பணியாற்றும் முறை குறித்து பேசி இருக்கிறார்.
By Kalyani Pandiyan S Jul 14, 2024
Hindustan Times Tamil
இது குறித்து அவர் அதில் பேசும் போது, “ நான் சுஜாதாவுடன் பணிபுரியும் பொழுது, முதலில் நான் ஒரு அவுட்லைன் ஸ்டோரியை ரெடி செய்து விடுவேன். அதன் பின்னர் நாங்கள் கதை விவாதத்தில் உட்காருவோம். அந்த கதை விவாதத்தில் எழுத்தாளர் சுஜாதாவும் இருப்பார். ஆனால் அவர் அந்த விவாதத்தில் எதுவுமே பேச மாட்டார். சீன்களை பற்றி டிஸ்கஸ் செய்யவும் மாட்டார்.
அதே போல புது சீன்களையோ, வசனங்களையோ அல்லது கதை பற்றியோ எதுவும் சொல்ல மாட்டார். அவர் அமைதியாக நாங்கள் பேசுவதை கவனித்து கொண்டு இருப்பார். நாங்கள் தொடர்ந்து அந்த கதையை பற்றி பேசிக்கொண்டே இருப்போம். அந்த கதை வளர்ந்து கொண்டே இருக்கும். எங்கேயாவது நாங்கள் தடுமாறி நிற்கும் பொழுது, அவர் ஏதாவது ஒரு எடுத்துக்காட்டுடன் வந்து, இந்த சிக்கலில் அவர்கள் அப்படி யோசித்தார்கள். ஆகையால் நீங்களும் அப்படி யோசியுங்கள் என்று எங்களை வழிநடத்துவார்.
முழு கதையையும் தயார் செய்த பின்னர், அந்தக் கதையின் முதல் காட்சியிலிருந்து, சுபம் வரை முழுவதுமாக எழுதுவதோடு, ஒவ்வொரு காட்சியிலும், எனக்கு என்ன தேவைப்படுகிறது என்பதையும் விளக்கி ஒரு கேசட்டில் பதிவு செய்து, அவரிடம் கொடுத்து விடுவேன். அதன் பின்னர், அவர் அதை அவரது வெர்ஷனில் மீண்டும் ஒருமுறை எழுதி, எங்களுக்கு அனுப்புவார். அவர் எழுதிக் கொண்டு வரும் பொழுது, அது வேறு மாதிரி, மிகவும் அழகாக இருக்கும்
அதில் திரைப்படத்திற்கு ஏற்றவாறு நாங்கள் சில திருத்தங்களை செய்வோம். அதை மறுபடியும் நான் அவருக்கு அனுப்புவேன். அவர் பெரும்பாலும் அதில் திருத்தங்களை செய்ய மாட்டார். எழுத்து பிழைகளை மட்டும் சரிசெய்து எனக்கு அனுப்பி வைப்பார். அப்படித்தான் நாங்கள் வேலை பார்ப்போம். ” என்று பேசினார்.
நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆற்றல் தரும் 6 சூப்பர் உணவுகள் இதோ!