நீலநிறத்தில் மனதை மயக்கும் விதமான வாசனையுடன் கூடிய லாவண்டர் பூக்கள் உடல் ஆரோக்கயத்துக்கும் பல்வேறு நன்மைகளை தருகிறது
By Muthu Vinayagam Kosalairaman
Aug 10, 2023
Hindustan Times
Tamil
லாவண்டர் பூ வகையாக இருந்தாலும் மருத்துவ மற்றும் தெரபி சிகிச்சைக்கு பயன்படும் மூலிகையாக உள்ளது
லாவண்டர் பூக்களினால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்
தூக்கத்தின் தரத்தை உயர்த்தும் தன்மை
சூடான கப் லாவண்டர் தேநீர் பருகுவது அல்லது லாவண்டர் எண்ணெய் சுவாசிப்பதன் மூலம் உங்களது தூக்கத்தின் தரத்தை உயர்த்தலாம்
வலி நிவாரணியாக திகழ்கிறது
லாவண்டர் எண்ணெய் உடலில் ஏற்படும் வலிகளை குறைக்க உதவுகிறது. அத்துடன் வீக்கத்தை குறைக்கும் பண்புகளும் இதில் ஏராளமாக உள்ளது
மனநிலை மாற்றத்தை உண்டாக்குகிறது
லாவண்டர் அரோமோதெரபி செய்வதன் மூலம் உங்களது நரம்புகளை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் கவலைகள் குறைந்து மனநிலை மாற்றம் ஏற்படுகிறது
பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்கிறது
நுண்ணுயிர், பூஞ்சைகளுக்கு எதிரான பண்புகள் லாவண்டரில் இடம்பிடித்திருப்பதால் அதன் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கிறது
கற்றாழை கொடுக்கும் நன்மைகள்
க்ளிக் செய்யவும்