நயன்தாராவிற்கு பல்வேறு திரைப்படங்களில் பின்னணி குரலாக இருந்த தீபா வெங்கட், அவரைப்பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
By Kalyani Pandiyan S
Jan 20, 2025
Hindustan Times
Tamil
இது குறித்து jfw யூடியூப் சேனலுக்கு பேசிய அவர், ‘நயன்தாரா தொழிலில் அவ்வளவு கறாராக இருப்பார்.
அவருக்கு ஒரு விஷயம் வேண்டுமென்றால், அது கிடைக்கும் வரை விடவே மாட்டார். நேர்த்தியாக இருப்பது அவரது இயல்பு.
அதேபோல, அவர் தன்னுடைய கதாபாத்திரம் எப்படி வெளியே தெரிய வேண்டும் என்பதில் மிக மிக கவனமாக இருப்பார்.
அது அவருடைய ஆடையாக இருக்கலாம், அல்லது அவர் வெளிப்படுத்தக்கூடிய எக்ஸ்பிரஷன்களாக இருக்கலாம் அல்லது அவர் பேசும் டப்பிங் மாடுலேஷனாக கூட இருக்கலாம்.
எல்லாவற்றிலும் அவர் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அவருக்காக நான் நிறைய படங்களில் குரல் கொடுத்திருக்கிறேன்.
அவர் நிறைய வாய்ப்புகளை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்; அதன் மூலம் அவர் மூலம் நான் பிரபலமும் அடைந்து இருக்கிறேன். ’ என்றார்.
பச்சை பயிரில் கிடைக்கும் நன்மைகள்
க்ளிக் செய்யவும்