திருமணத்திற்கு முன் உங்கள் இணையராகப் போகிறவரிடம் கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள்!

By Marimuthu M
Jan 08, 2024

Hindustan Times
Tamil

குழந்தைகள் குறித்த எதிர்பார்ப்பு என்னவென்று தெரிந்துகொள்வது அவசியம்.

பிரச்னைகளை எப்படி தீர்ப்பீர்கள் என்பது குறித்து பேசவேண்டியது கட்டாயம்.

கடந்த கால உறவுகள், பிரிவுகள், குடும்பங்கள், தனிப்பட்ட அனுபவங்கள் என அனைத்தையும் பகிர்ந்து புரிந்துகொள்ள வேண்டும். 

இணையரின் நீண்ட நாள் இலக்குகள், ஆசைகள், விருப்பங்களை அறிந்துகொள்வது, விட்டுக்கொடுத்து நடக்க உதவும்.

வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதில் உங்கள் பார்வை என்ன என்பது குறித்து அறிந்துகொள்ள வேண்டும்

பணம் குறித்தான பார்வை, பணத்தைச் செலவிடும் பழக்க வழக்கங்கள்,  பொருளாதார பார்வைகள் என்ன என்பது குறித்து இருவரும் வெளிப்படையான உரையாடலை செய்ய வேண்டும்.

கடவுள் மற்றும் மத நம்பிக்கைகள் பற்றி உரையாடுவது நல்லது. ஒருவரின் எந்த நம்பிக்கையும் மற்றவரைப் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். 

 ’மேஷம் முதல் மீனம் வரை’ வாழ்கையை திருப்பி போடும் வித்யுத் யோகம் யாருக்கு?