குட் பேட் அக்லி படத்தில் பழைய திரைப்படப் பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா வழக்கறிஞர் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

By Suguna Devi P
Apr 15, 2025

Hindustan Times
Tamil

குட் பேட் அக்லி படத்தில் ஒத்த ரூபாய் தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்ச குருவி உள்ளிட்ட தான் இசையமைத்த பாடல்களை தன்னுடய அனுமதியில்லாமல் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கறிஞர் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா வழக்கறிஞர் சார்பில் அளிக்கப்பட்ட நேட்டீஸில், தான் இசையமத்த த்த ரூபாய் தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்ச குருவி உள்ளிட்ட பாடல்கள் என்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு இழப்பீடாக 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 அத்துடன் 7 நாட்களில் பாடல்களை படத்திலிருந்து நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அஜித் குமார் நாயகனாக நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம், ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த ஆக்‌ஷன் திரைப்படம் ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருப்பதால் பாக்ஸ் ஆபிஸில் அசத்தலான வசூலைக் குவித்து வருவதுடன் முதல் வார இறுதியில் அபார வெற்றியைப் பெற்றது.

குட் பேட் அக்லி இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த மூன்றாவது தமிழ் படமாகும். இது சமீபத்தில் மத கத ராஜா மற்றும் வீர தீர சூரன் ஆகிய படங்களை பின்னுக்குத் தள்ளி தரவரிசையில் உயர்ந்து நிற்கிறது. 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. நவீன் எர்னேனி மற்றும் ரவிசங்கர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய்க்கு மேல் எனக் கூறப்படுகிறது.

படம் நன்றாக ஓடி வரும் சூழ்நிலையில் இந்த வழக்கு பெரும் பிரச்சனையாக அமைந்துள்ளது. 

கோடை காலத்தில் சில எளிய டிப்ஸ்களை பின்பற்ற சருமத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். சருமத்தை பேனி காக்க உதவும் சில எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்