By Pandeeswari Gurusamy
Apr 12, 2024

Hindustan Times
Tamil

மனிதனுக்கு பல்வேறு நன்மைகளைப் பயக்கக்கூடிய எத்தனையோ உணவுகள் இருக்கின்றது. அதில் ஒன்றுதான் அதீத மருத்துவ குணம் கொண்ட சியா விதைகள்.

Pexels

சியா விதிகளை காலைப் பொழுதில் உட்கொண்டு வந்தால் நமது உடலுக்கு அதீத ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்

Pexels

நம் குடல் மற்றும் செரிமான பகுதிகளுக்குச் சிறந்த சத்தாக விளங்கக்கூடிய நார்ச்சத்து இந்த விதையில் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. செரிமானம் மற்றும் மலக்குடல் செயல்பாடுகளை இந்த சியா விதைகள் இலகுவாக மாற்றுகின்றது. 

Pexels

சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் இருக்கின்ற காரணத்தினால் காலைப்பொழுதில் இதை எடுத்துக் கொண்டால் வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் மூலம் அதிக அளவு உணவு எடுத்துக் கொள்ளும் பழக்கம் குறையும். 

Pexels

உடலில் கலோரிகள் சேராத காரணத்தினால் உடல் எடை குறையும். தினசரி உடற்பயிற்சி செய்பவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

Pexels

இந்த விதைகளில் கரையும் தன்மை கொண்ட நார்ச்சத்து இருக்கின்ற காரணத்தினால் ரத்தத்தின் விரைவில் கலந்து உடனே சத்துகள் சேருகின்றன. அதன் காரணமாகச் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

Pexels

உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளின் தன்மையை இது குறைக்கும் என கூறப்படுகிறது. சியா விதையில் ஒமேகா 3 14 ஃபேட்டி சத்து அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் ரத்த அழுத்தம் மற்றும் அலர்ஜி உள்ளிட்டவை குறையும் என கூறப்படுகிறது. உடலில் கெட்ட கொழுப்பைக் குறைக்கத் தினமும் சியா விதைகள் சாப்பிடலாம்.

Pexels

சியா விதைகளில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தினமும் நாம் அதை எடுத்துக் கொண்டால் உடலில் சோர்வு மற்றும் கலைப்பு வராது எனக் கூறப்படுகிறது.

Pexels

சியா விதைகளை இரவு முழுவதும் தண்ணீர் ஊற வைத்துவிட்டு காலை எழுந்தவுடன் தண்ணீருடன் சேர்த்துப் பருகலாம். குளிர்பானங்களோடு இந்த விதைகளைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

Pexels

 நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆற்றல் தரும் 6 சூப்பர் உணவுகள் இதோ!

pixa bay