குடும்பத்தில் மகிழ்ச்சியை வளர்க்கும் யோசனைகள்

By Marimuthu M
Aug 08, 2024

Hindustan Times
Tamil

குடும்பத்தில் பிரச்னை வரும்போது நிரந்தரத்தீர்வைத் தேடுங்கள். பதிலடி கொடுக்க முயற்சிக்காதீர்கள்

குடும்பத்தில் மற்றவர்களின் மனநிலைக்கு ஏற்றார்போல் உங்களை மாற்றிக்கொண்டு நடங்கள். ஆணவமாக இருக்காதீர்கள்

சின்ன விஷயங்களைக் கூட மனம் திறந்து பாராட்டுங்கள்

சின்ன சின்ன தவறுகளை எல்லாம் பெரிதுபடுத்தி வம்பு இழுக்காதீர்கள்

உங்களது விருப்பங்கள் அனைத்தையும் குடும்ப உறுப்பினர்கள் செய்யவேண்டும் என நினைக்காமல், அவர்களின் கருத்துகளையும் கேட்டு முடிவு எடுங்கள்

அனைத்து நேரங்களிலும் வேலை வேலை என்று ஓடி, உங்கள் உடல்நிலையைக் கெடுக்காமல், அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

 குடும்பத்தில் பிரச்னைகள் எழும்போது வார்த்தைகளை விடாதீர்கள். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள்

முடிந்தவரை அனைத்து குடும்ப உறுப்பினர்களிடமும் மனம்விட்டு ஒரு 10 நிமிடங்கள் பேசினால் போதும்

Sperm : ஆண்களே உங்கள் இரவுகளை அழகாக்க உதவும் 6 உணவுகள்!

Pexels