சாப்பாட்டிற்கு முன்னும், பின்னும் டீ, காபி குடித்தால் ஆபத்தா?

By Karthikeyan S
May 15, 2024

Hindustan Times
Tamil

சாப்பிடுவதற்கு முன்பும், பின்னும் குறைந்தது ஒரு மணி நேரம் டீ அல்லது காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வலியுறுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக ஐசிஎம்ஆர் அறிக்கையில், டீ அல்லது காபியில் புத்துணர்வு ஊட்டக் கூடிய காஃபின் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதால் அது மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

150 மி.லி காபியில் 80 முதல் 120 மி.கி. காஃபின், டீயில் 30 முதல் 65 மி.கி. காஃபின் உள்ளது.

ஒரு மனிதருக்கு சராசரியாக ஒரு நாளில் 300 மி.கி. காஃபின் உடலில் அதகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

டீ அல்லது காபி குடிப்பதால் உடலுக்கு செல்லும் இரும்பு சத்துக்கள் தடைப்படக்கூடும்

சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னும், பின்னும் டீ மற்றும் காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும்

காபியை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் இதயத் துடிப்பில் அசாதாரணங்களை ஏற்படுத்தும்

ICMR வழிகாட்டுதல்கள், பால் இல்லாமல் தேநீர் குடிப்பதை பரிந்துரைக்கின்றன

எலும்புகளை பலமாக்கும் உணவுகள்