ஐசிசி விருதுகள் பட்டியல்: ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி ஆண்டின் சிறந்த வீரர் 

By Manigandan K T
Jan 29, 2025

Hindustan Times
Tamil

2024 ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் வீரர் விருதை வென்றவர்களின் பட்டியல் இங்கே.

ஜஸ்பிரித் பும்ரா அனைத்து வடிவங்களிலும் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றார்.

ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக நியூசிலாந்தின் அமெலியா கெர் தேர்வு செய்யப்பட்டார்.

ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.

ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை ஸ்மிருதி மந்தனா வென்றார்.

சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

ஆண்டின் சிறந்த மகளிர் டி20 கிரிக்கெட் வீராங்கனையாக அமெலியா கெர் தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா ஒமர்சாய் தேர்வு செய்யப்பட்டார்.

ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனையாக தென்னாப்பிரிக்காவின் அன்ரி டிர்க்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கையின் கமிந்து மெண்டிஸ் ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆண்டின் சிறந்த மகளிர் அசோசியேட் கிரிக்கெட் வீராங்கனையாக எமிரேட்ஸின் இஷா ஓசா தேர்வு செய்யப்பட்டார்.

ஆண்டின் சிறந்த ஆண்கள் அசோசியேட் கிரிக்கெட் வீரராக நமீபியாவின் ஜெரார்டு எராஸ்மஸ் தேர்வு செய்யப்பட்டார்.

ஆண்டின் சிறந்த நடுவர் விருதை இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் வென்றார்.

உங்கள் தகவல் தொடர்பு திறனை மேம்படுத்த உதவும் சக்திவாய்ந்த உத்திகள்

pixa bay