முடி உதிர்வதை தடுப்பதற்கான வழிகள்!

By Suguna Devi P
Jan 09, 2025

Hindustan Times
Tamil

முடி உதிர்தல் என்பது முடி வளர்ச்சி சுழற்சியின் இயல்பான பகுதியாகும். ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள் உதிர்வது இயல்பானது. ஆனால் இதை விட முடி உதிர ஆரம்பித்தால் பிரச்சனை தான். இந்த முடி உதிர்தல் ஆண்களின் வழுக்கையின் அறிகுறியாகும்.

சமச்சீர் உணவு ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதம் நிறைந்த சமச்சீர் உணவு அவசியம். பழங்கள், காய்கறிகள்,  புரதங்கள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், முழு தானியங்கள் மற்றும் பயோட்டின் ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். 

முடி சாயம், ப்ளீச் மற்றும் ஆல்கஹால் கொண்ட ஸ்டைலிங் உங்கள் முடி மற்றும் உச்சந்தலையை சேதப்படுத்தும். ஹேர் ட்ரையர்களைப் பயன்படுத்துவதைக் குறைக்கவும்,

தினமும் லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு தலையை கழுவலாம். அதிகமான முறை ஷாம்பு போடுவதும் அதிக முடி உதிர்வை ஏற்படுத்தும்.

சுடு தண்ணீரில் தலைக்கு குளிப்பதை உடனடியாக நிறுத்துங்கள். இது முடியின் வேர்களை வலுவிலக்க செய்யும். 

 ஹேர் ஸ்பாவை தவிர்க்கவும் எண்ணெய் . எனவே எண்ணெய் சிகிச்சைகள், ஹேர் ஸ்பாக்கள் மற்றும் ஹேர் மாஸ்க்குகளை தவிர்க்கவும். எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்வதும் பயனுள்ளதாக இருக்கும்.

இறுக்கமான சிகை அலங்காரங்களைத் இறுக்கமான போனிடெயில்கள், இறுக்கமான மேன்-பன்கள் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

குளிர்காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி?