நீண்ட காலம் மது அருந்துபவர் என்றால் கொஞ்சம் கொஞ்சமாக கைவிடுங்கள்
அதாவது தினமும் மது அருந்தாமல் மாதத்திற்கு ஒரு நாள் என்று குறைத்துக் கொள்ளுங்கள்
புதிதாக மது அருந்தும் பழக்கத்தில் ஆளானவர்கள் என்றால் உடனே கைவிடுங்கள்.
மது அருந்துபவர்களின் உறவை துண்டியுங்கள்
மதுபானக் கூடங்கள் பக்கம் செல்லாதீர்கள்
வெளியில் செல்லும்போது கூடுதலாக பணம் எடுத்துச் செல்லாதீர்கள். குறிப்பாக கிரெடிட் கார்டை வீட்டிலேயே வைத்துவிட்டுச் செல்லுங்கள்.
மது அருந்தும் எண்ணம் தோன்றும்போது குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள். தனியாக இருக்கிறீர்கள் என்றால் படம் பார்ப்பது, புத்தகம் படிப்பது போன்ற உங்களுக்கு பிடித்த மற்ற விஷயங்களை செய்ய முயற்சி செய்யுங்கள்.
கல்லீரல் கொழுப்பா? இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்!