மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் கூட பாஸிட்டிவ் ஆக இருப்பது எப்படி?

By Marimuthu M
May 21, 2025

Hindustan Times
Tamil

எந்த சிக்கலும் "ஓர் அனுபவம்" என்பதைக் கவனிக்க வேண்டும்.இதில் இருந்து என்ன கற்றுக்கொண்டோம் என்று கேட்பதுதான் நம்மை நேர்மறை பாதையில் கொண்டு செல்லும்

"இந்த சூழ்நிலை நிலைத்து நிற்காது", "நான் இதை கடந்து விடுவேன்" என்னும் மனத்திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். 

ஒவ்வொரு நாளும் நடந்த ஒன்றிரண்டு நன்மைகளுக்கு நன்றி சொல்லி டைரியில் எழுதிவையுங்கள். இது உங்கள் கவனத்தை பிரச்னையிலிருந்து சந்தோஷமளிக்கும் விஷயங்களுக்குத் திருப்பும்.

தூக்கம், உடற்பயிற்சி, உணவு ஆகியவை மனதை நேர்மறையாக வைக்க உதவும். 

'’ஏன் இது எனக்கு நடந்தது?" என்பதற்குப் பதிலாக "இதை எப்படி சமாளிக்கலாம்?" என்று மனதிற்குள் கேட்டுக்கொள்ளவும்.

"நான் இதைச் சமாளிக்கிறேன்", "நான் வளர்கிறேன்", போன்ற வரிகளை தினமும் மனதில் சொல்லிக்கொள்ளுங்கள். 

மற்றவர்களிடம் உதவி கேட்டு, உதவியை ஏற்க கற்றுக்கொள்வது முக்கியமானது.

மன அழுத்தத்தைக் குறைக்க 5 எளிதான யோகாசனங்கள்