படித்ததை நினைவில் வைத்துக் கொள்வது எப்படி?

By Marimuthu M
Jun 24, 2024

Hindustan Times
Tamil

படிக்கும்போது புத்தகங்களின் எழுத்துக்களைத் தொட்டு, வாயில் சிறிது சப்தமிட்டு படித்தால் நினைவுகூடும்.

கீ-பாயிண்ட்களாக குறிப்பு எடுத்து வைத்துப் படியுங்கள்.

படங்கள் வரைந்தோ, ஃபார்முலாக்களை ஒரு பேப்பரில் எழுதியோ வீட்டில் நாம் உலாவும் இடத்தில் ஒட்டி வைத்துப் படியுங்கள்.

ஒவ்வொரு தகவல்களையும் கதைகளாக நினைத்துப் படித்து,இது நம் வாழ்க்கையில் எப்படி பயன்படும் எனப்பொருத்திப் பார்த்து படிக்க வேண்டும்.  

முதலில் நாம் படிக்கத் தொடங்கும்போது ரஃபாக முழு பாடத்தையும் வாசித்துவிட வேண்டும்.

சிறிது இடைவெளி விட்டு படிப்பது நினைவு பலத்தைக் கூட்டும்.

தினமும் முந்தைய நாள் படித்ததில் எவ்வளவு நினைவு இருக்கிறது என்பதைப் பரிசோதித்துப் பாருங்கள். படிப்படியாக ஒவ்வொரு நாட்களாக கூட்டி செக் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். நினைவுத்திறன் கூடும்

தினமும் 15 நிமிடங்கள் தியானம் செய்துவிட்டு படிக்கத் தொடங்குங்கள். நினைவுத்திறன் கூடும்.

இந்த வாரம் (நவ.24-30) வரை 12 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்