பெரும்பாலானோர் வயிற்றில் உண்டாகும் வாயு பிரச்சனையை தீர்க்க மாத்திரைகளை உட்கொள்கின்றனர் . ஆனால் நமது வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே வாயுவை சரிபடுத்த முடியும்.  

By Suguna Devi P
Nov 28, 2024

Hindustan Times
Tamil

 பெருஞ்சீரகம்  வாயு தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் சூடு தண்ணீரில் பெருஞ்சீரகம் போட்டு குடித்தால் அதில்  உள்ள தனிமங்கள் வாயுவை வெளியேற்றும்.

பெருங்காயத்தூள்  பெருங்காயத்தூள் செரிமானத்திற்கு உதவும். இது கலந்த தண்ணீரை குடிக்க வாயுவை அகற்றும். 

புதினா இலை  புதினா இலை கலந்த டீயை குடித்தால் உடனடியாக வாயு தொல்லை நீங்கும். மேலும் இது வயிற்று வலி மற்றும் எரிச்சல் உணர்வை குணப்படுத்தும்.  

சீரகம்  வாயு பிரச்சனை நீங்க சீரக்கத்தை வறுத்து அரைத்து நீரில் கலந்து குடிக்க வேண்டும். 

வெந்தயம்  வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.. இது செரிமானத்தை சீராக்க உதவுகிறது. இதனை தண்ணீரில் கலந்து குடிக்க வாயு தொல்லை மற்றும் வாயு உப்பசம் சரியாகும். 

மோரில் கருப்பட்டி அல்லது கருப்பு உப்பு கலந்து குடித்தால் வாயு தொல்லை நீங்கும். 

ஆப்பிள் சைடர் வினிகர்  ஒரு டம்ளர் சூடு தண்ணீரில் ஆப்பிள் சைடர் வினிகரை  கலந்து குடித்தால் வாயு தொல்லை நீங்கும். 

அல்லு அர்ஜூன் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் இருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.,