உங்களுக்கு விருப்பமான நண்பருடன் அடிக்கடி மனம் விட்டுப் பேசுங்கள். விருப்பமான இடங்களுக்குச் சென்று வாருங்கள். மனமாற்றம் நிகழும்.
உங்கள் முன்னாள் அன்புக்குரியவர்களின் சோசியல் மீடியா பக்கங்களை பார்க்காதீர்கள்.
உங்கள் காதல் தோல்வியுற்றது என்பதை ஏற்றுக்கொள்ள மனதளவில் தயாராகுங்கள்
உங்கள் முன்னாள் காதலர் அல்லது காதலியை மன்னியுங்கள். உங்கள் முன்னாள் காதலி உங்களுக்கு செய்த நன்மைகளை நினைத்து ஒரு கடிதம் எழுதி பின் அதை கிழித்துப் போடுங்கள்.
வாழ்வியல் தத்துவங்களை, யதார்த்தத்தைப் புரிய வைக்கும் புத்தகங்கள் மற்றும் சினிமாவைப் பார்க்கலாம்.
உங்களை வெறுத்து ஒதுக்கியவர்கள், உங்களுக்கானவர்கள் அல்ல என்பதை உணருங்கள்
உங்கள் எதிர்மறையான சிந்தனையை நேர்மறையாக மாற்ற, முயற்சியுங்கள். உங்களை வேண்டாம் என்று சொல்பவர்களை விட, உங்களை மிகவும் விரும்பும் நபர்களுக்காக வாழுங்கள்.