ரிலேஷன்ஷிப் பிரேக்அப் கட்டத்தில் இருந்து மீள்வது எப்படி?

By Marimuthu M
Feb 21, 2024

Hindustan Times
Tamil

ரிலேஷன்ஷிப்பில் முக்கியமான விஷயம் ஒருவரை ஒருவர் பாராட்டுதல். மனஸ்தாபம் இருக்கும்போது கூட இல்லறத் துணையின் நல்ல விஷயங்களைப் பாராட்டுங்கள். அன்பு பெருகும்.

ரிலேஷன்ஷிப் பிரச்னையாக இருந்தாலும் ஒருவரின் தேவையை மற்றொருவர் பூர்த்தி செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் துணையை மேல் அதிகாரி திட்டிவிட்டாலோ, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலோ கொஞ்சமேனும் ஆறுதல் சொல்லுங்கள். அது பிணைப்பை பலப்படுத்தும்

இல்லறத்தில் ஈடுபடும் இருவருக்கும் ஒவ்வொரு இலக்குகள் இருக்கும். ஒருவரது கனவு மற்றும் இலக்குக்கு மற்றொருவர் துணை நில்லுங்கள்.

இரண்டு பேருக்கும் பிடித்தமான ஒரு விஷயம் இருக்கும். அது குறித்து இருவரும் அடிக்கடி மனம்விட்டு நிறைய பேசிக் கொள்ளுங்கள்.

தொட்டது எல்லாத்துக்கும் பிரச்னை செய்யாமல், அந்தப் பிரச்னை எதனால் உண்டாகிறது. இல்லறத் துணையின் கருத்து என்ன என்பதையும் காது கொடுத்துக் கேளுங்கள். 

கணவன் - மனைவி பிரச்னையை அடிக்கடி பெற்றோரிடம் போன் செய்து, லைவ் அப்டேட் கொடுக்காதீர்கள். அந்தப் பழக்கத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

கணவன் - மனைவி ஒவ்வொருவருக்கும் ஒரு பிரைவசி பாயின்ட் இருக்கிறது. அதில் மற்றொருவர் தலையிடாதீர்கள். 

பிரச்னை முடிந்து இருவரும் சைலண்ட் மோட் நிலைக்குச் சென்றபிறகு, ஒருவர் பேசத் தொடங்கினால் மற்றொருவர் உடனே பேசிவிடுங்கள். அதற்கு முன்பு நடந்ததை மறந்துவிடுங்கள். 

’ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா?’ ஜோதிடர் சொல்லும் மாற்றுக் கருத்து!