கடற்கரை, ஏதேனும் விழா நடைபெறும் இடங்கள் என பல இடங்களில் பொதுவாக விற்கப்படும் மசாலா பொரி மிகவும் பிரபலமான சிற்றுண்டி ஆகும். இனி இதனை நாமே வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். 

By Suguna Devi P
Apr 15, 2025

Hindustan Times
Tamil

தேவையான பொருள்கள் ஒரு கப் பொரி ஒரு கப் வேர்க்கடலை   ஒரு கப் காரபூந்தி (அ) மிக்சர் ஒரு பெரிய வெங்காயம் ஒரு  தக்காளி  ஒரு கேரட்  ஒரு வெள்ளரிக்காய் 

ஒரு கொத்து கொத்தமல்லித் தழை  ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள் ஒரு  எலுமிச்சை பழம் 

முதலில் பொரி மற்றும் காரபூந்தியை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும். வேர்க்கடலையை வேக வைத்து தோலுரித்து தயாராக வைக்கவும்.

பின்னர் வெங்காயம், தக்காளி, கேரட், வெள்ளரிக்காய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு அகன்ற பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள  அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து எலுமிச்சை பழத்தை பிழந்து நன்கு கிளறி விடவும்.

பொரி கலவையை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு பரிமாறவும். எளிதில் செய்ய கூடிய மசாலா வேர்கடலை ரெடி. இதில் மாங்காய் சேர்த்தும் செய்யலாம்.

இந்தப் பொரி மிகவும் சுவையாக இருக்கும். வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

கொங்கு நாட்டு ஸ்டைலில் கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?