வட இந்திய உணவுகளில் ஒன்றான நாண் மிகவும் சுவையாக இருக்கும். இனி கடைக்கு செல்ல வேண்டாம். வீட்டிலேயே எளிதாக நாண் செய்வதை அறிந்துக்கொள்ளுங்கள்.
By Suguna Devi P Mar 31, 2025
Hindustan Times Tamil
தேவையான பொருட்கள்:
அரை கப் மைதா
அரை டேபிள்ஸ்பூன் சர்க்கரை
அரை டேபிள்ஸ்பூன் சோடா
அரை டேபிள்ஸ்பூன் ஈஸ்ட்
அரை கப் தயிர்
அரை கப் பால்
2 டேபிள்ஸ்பூன் நெய்
தேவையான அளவு உப்பு
மைதா மாவுடன் உப்பு, ஆப்ப சோடா சேர்த்து சலிக்கவும். பின்னர் வெதுவெதுப்பான பாலில் ஈஸ்ட், சர்க்கரை கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு தயிரையும் அதில் விட்டு கலக்கவும்.
கலக்கி வைத்த ஈஸ்ட் கலவை நுரைத்து வந்தவுடன், சலித்த மாவில் சேர்க்கவும். பின்னர் உருக்கிய நெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
கலவையை ஈரத்துணியால் மூடி 1 மணி நேரம் வைக்கவும். இந்த மாவு 2 மடங்காக உப்பியவுடன் ஒரே அளவுள்ள உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
சப்பாத்திகளாக தேய்த்து, ஒரு பக்கம் சிறிது தண்ணீர் தடவவும்.
சூடான தோசைக்கல்லில் தண்ணீர் தடவிய பாகத்தை போடவும்.
1 நிமிடம் சுட்டவுடன், கல்லை அடுப்பில் இருந்து எடுத்து தலைகீழாக திருப்பி, தணலில் காட்டவும். நாண் உப்பி வந்தவுடன் கல்லிலிருந்து எடுக்கவும். மேலே லேசாக வெண்ணெய் தடவி பரிமாறவும்.
உருளைக்கிழங்கு மசாலா, பன்னீர் பட்டர் மசாலா மற்றும் அசைவ கறி குழம்புகளுடன் இந்த நாண் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.