பட்டர் பிஸ்கட் என்பது வெண்ணெய் சேர்த்து செய்யும் ஒரு வகை பிஸ்கட் ஆகும். இது ஒரு இனிப்பு சிற்றுண்டி ஆகும்.இதனை நாம் பெரும்பாலும் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். 

By Suguna Devi P
Apr 28, 2025

Hindustan Times
Tamil

வீட்டிலேயே எளிமையான முறையில் பட்டர் பிஸ்கட் செய்ய முடியும். அதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி செய்து பாருங்கள். 

தேவையான பொருள்கள்:  100 கிராம் வெண்ணெய்  140 கிராம் மைதா மாவு  கால் கப் பொடியாக்கிய சர்க்கரை  -3 முட்டையின் மஞ்சள் கரு  அரை டீஸ்பூன் வென்னிலா சுகர் பவுடர்  அரை டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ் அரை கப் முந்திரி 

வெண்ணெயை உருக்கி, அத்துடன் பொடி செய்த சீனியைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும். அதனுடன் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெனிலா சுகர் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு மைதா மாவைச் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அப்போது தான் பிஸ்கட் நன்றாக உப்பி வரும். வேறு ஏதேனும் பொருட்களை சேர்க்க வேண்டாம்.

மெல்லியதான ட்ரேயில் எண்ணெய் தடவி, அதில் பிசைந்த மாவைச் சிறிய வட்ட வடிவ பிஸ்கட்டுகளாகத் தட்டி இடைவெளிவிட்டு வைக்கவும். நடுவில் முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.

180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 10 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கவும். சுவையான பட்டர் பிஸ்கட் ரெடி. டீ, காபியுடன் பரிமாறவும்.

இது போன்று செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

குரு மிதுன ராசியில் நுழைந்து கொடுமையான பலன்களை கொடுக்கும் ராசிகள் 

Canva