டேஸ்டான ஒயிட் சாஸ் பாஸ்தா ரெசிப்பியை எப்படி செய்வது என அறிந்து கொள்வோம் வாங்க.

By Manigandan K T
Apr 12, 2025

Hindustan Times
Tamil

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் உப்பும் பாத்ஸாவும் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்

பின்னர் ஒரு பெரிய கடாயில் நறுக்கிய வெங்காயம், வெண்ணைய், நறுக்கிய சிவப்பு குடைமிளகாய் , பூண்டு, கேரட், ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்

காய் நன்கு வெந்ததும் சில்லி பிளேக்ஸ், தேவைக்கேற்ப உப்பு, இத்தாலியன் சீசனிங், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.

இவை நன்கு கலந்ததும் வேகவைத்து ஏற்கனவே நாம் எடுத்து வைத்துள்ள பாஸ்தாவை இதில் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு பானில் உப்பில்லாத வெண்ணெய் 4 கியூப்ஸ், 3 டேபிள்ஸ்பூன் மைதா சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இதில் காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்க்கவும். மைதா பாலில் நன்கு கரைந்துவிடும். 

இதில் உப்பு, மிளகுத்தூள், சில்லி பிளேக்ஸ், இத்தாலியன் சீசனிங் சேர்க்கவும். இதில், 4  சீஸ் துண்டு சேர்க்கவும். நன்கு கரையும் வரை கிண்டி விடுங்கள்.

இப்போது இந்த கிரீம் சீஸுடன் ஏற்கனவே தயாராக வைத்துள்ள காய்கறி கலந்த பாஸ்தாவை மிக்ஸ் செய்யுங்கள்.

குறைந்த தீயில் வைத்து 5 நிமிடம் கிளறி விடவும். அவ்வளவுதான் கிரீமி ஒயிட் சாஸ் பாஸ்தா தயார். இதை சூடாக சாப்பிட்டால் மிகவும் டேஸ்டாக நன்றாக இருக்கும். 

உடலில் ஏற்படும் வலிகளுக்கு ஆயூர்வேத மருத்துவத்தின் படி இயற்கை வழங்கும் 5 சிறந்த வலி நிவாரணிகள் உள்ளன. இதன் உதவியுடன் உங்கள் வலிக்கு குட்பை சொல்லுங்கள்.