இன்று சித்திரை முதல் நாள் தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீட்டில் விசேஷ உணவுகள் செய்வது வழக்கம்.
By Suguna Devi P Apr 14, 2025
Hindustan Times Tamil
சித்திரை நாளில் செய்யபடும் உணவுகளில் நிச்சயமாக பாயாசம் இருக்கும். தித்திக்கும் பாயாசத்தோடு தான் இந்த விருந்து முடியும் . பாயாசம் செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அரை கப் சேமியா
கால் கப் சர்க்கரை
10 முந்திரி
3 ஏலக்காய்
ஒரு கப் தேங்காய் பால்
3 டீஸ்பூன் நெய்
10 கிஸ்மிஸ் பழம்
2 டீஸ்பூன் மைதா
தேவையான அளவு உப்பு
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானதும் முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுக்க வேண்டும்.
பாயாசம் செய்வதற்கு தேவையான சேமியாவையும் ஒரு கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
சேமியா நன்கு வறுபட்டதும் அதில் தண்ணீர் ஊற்றி நன்கு வேகா விட வேண்டும். மேலும் இதில் மைதா மாவை கரைத்து ஊற்ற வேண்டும்.
சேமியா நன்கு கொதித்த பின்னர் இதில் எடுத்து வைத்து இருக்கும் தேங்காய் பாலை ஊற்ற வேண்டும். இவை அனைத்தும் ஒன்றாக காலக்குமாறு கிளறி விட வேண்டும்.
பாயாசம் கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்னர் முன்னர் வறுத்து வைத்திருந்த முந்திரி, பாதாம் போட்டு இறக்கவும். சுவையான சேமியா பாயாசம் ரெடி!
சனி கோடி கோடியா கொட்டணுமா.. தோஷங்கள் நீங்க இந்த சின்ன பரிகாரத்தை ட்ரை பண்ணுங்க!