ரிலேஷன்ஷிப்பில் பிறநபர்களின் தலையீடுகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ கடைப்பிடிக்க வேண்டியவை!

By Marimuthu M
May 08, 2025

Hindustan Times
Tamil

உறவில் எதைப் பகிர வேண்டும், எதைப் பகிரக்கூடாது என்பதை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட விஷயங்களை பொதுவில் பேசாத பழக்கம் கொண்டிருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் இருந்தாலும், சில விஷயங்கள் இருவரின் தனியுரிமை சார்ந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆலோசனை கேட்பது ஒரு விஷயம் தான்; ஆனால், அதை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

உறவில் கணவன் - மனைவி ஆகிய "நாமே ஒரு அணி" என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வெளியிலிருந்து யாரும் பிரிக்க முடியாத உறவாக இருக்க வேண்டும்.

 சிக்கல்கள் வந்தால், மூன்றாவது நபரின் ஊடுருவல் இல்லாமல்,  ஒருவருக்கொருவர் நேரடியாக பேசுவதும் புரிந்துகொள்வதும் மிகவும் முக்கியம்

மற்றவர்கள் கணவன் - மனைவி பிரச்னையில் பேசவந்தால், “இது எங்கள் இருவருக்குள் பேசவேண்டிய விஷயம்” என்பதைக் கூறும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

 இருவரும் ஒருவரை ஒருவர் மனதார நம்புங்கள். அப்படி நம்பும்போது, வெளியிலுள்ள யாரின் தலையீடும் தாக்கமற்றதாகி விடும்.

உங்க சமையல் மணம் அண்டை வீட்டாரையும் சுண்டி இழுக்க வேண்டுமா.. சூப்பர் டிப்ஸ் இதோ!