விரிசல் கண்ட உறவை சரிசெய்வது எப்படி?

By Marimuthu M
Feb 01, 2024

Hindustan Times
Tamil

உடைந்த உறவு ஒட்டாது என்ற பழைய வாதத்தைத் தூக்கிப் போடுங்கள். உடைந்தால்தான் இன்னும் இறுக்கம் பலப்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்

உறவில் பிரச்னை இருந்து பிரிந்து இருந்தால் நம்பிக்கையுடன் தொடர்புகொள்ள முயற்சி செய்யுங்கள்

பிரிவுகளின்போது பொறுமையாக பேசுவதன் மூலம் தான் தீர்வு கிடைக்கும்

பிரச்னைக்கு நீங்கள் தான் காரணம் என்றால் தவறுகளை ஒப்புக் கொள்ளுங்கள். வருத்தம் தெரிவியுங்கள்

பிரிவுத்துயர் மோசமான வலி. செய்த தவறினை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள்.

பிரிந்த நபருக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்தால் உதவுங்கள். அது உங்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும்.

பிரிந்து இருக்கையில் முடிந்தளவு நேரடியாகப் பேச முயற்சியுங்கள். மூன்றாம் நபரை உள்ளே அனுமதிக்காதீர்கள். அது பிரச்னையை வளர்க்கும். 

நெய்யை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்