கேரள ஸ்டைல் ராகி இலை அடை செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்
By Divya Sekar
Mar 13, 2025
Hindustan Times
Tamil
தேவையான பொருட்கள் 1. அரிசி மாவு - 1 கப் 2. கேழ்வரகு மாவு - 1/4 கப் 3. உப்பு - 1 சிட்டிகை 4. நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் 5. துருவிய தேங்காய் - 1 கிண்ணம் 6. வெல்லம் - 1/4 கப் 7. ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன் 8. எண்ணெய்
பாத்திரத்தில் அரிசி மாவு, கேழ்வரகு மாவு, உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கலந்துவிடவும்
பின்பு சிறிது சிறிதாக சூடான தண்ணீர் சேர்த்து பிசைந்து மாவு திரண்டு வந்த பின் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைந்து10 நிமிடம் ஊறவிடவும்
மற்றொரு பாத்திரத்தில் துருவிய தேங்காய், வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.வாழையிலையை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
பின்பு அதில் எண்ணெய் தடவி தயார் செய்த மாவில் சிறிதளவு எடுத்து உருண்டையாக உருட்டி இலையில் வைத்து தட்டையாக தட்டி கொள்ளவும்
பிறகு தயார் செய்த கலவையை வைத்து இலையை மூடவும்
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பின்பு தயார் செய்த அடையை வைத்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் வேகவிடவும்
இப்போது சுவையான, ஆரோக்கியமான கேழ்வரகு இலை அடை தயார்
இதனை வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்
’விடாமல் உயரும் தங்கம்’ தங்கம் விலை உயர்வுக்கான டாப் 5 காரணங்கள்!
க்ளிக் செய்யவும்