பலாப்பழத்தைக் கொண்டு ருசியான பாயாசம் செய்வது எப்படி என்பது குறித்து இதில் பார்க்கலாம்
By Divya Sekar Mar 14, 2025
Hindustan Times Tamil
தேவையான பொருட்கள்
1.ஜவ்வரிசி- 1 கப்
2.பலாப்பழம்- 5 சுளைகள்
3.வெல்ல பாகு- அரை கப்
4.ஏலக்காய்தூள் -அரைஸ்பூன்
5.தேங்காய்- அரைமூடி
6.முந்திரிபருப்பு- 8
7.கிஸ்மிஸ்பழம் - 15
8. நெய் - 6 ஸ்பூன்
முதலில், பலா சுளையில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு தனியாக எடுத்து வைக்க வேண்டும். பின்னர் இந்த பலா சுளையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
இதையடுத்து ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிறிது சிறிதாக நறுக்கி வைத்துள்ள பலா சுளையை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்
வேக வைத்த பலா சுளையின் சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இதையடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைக் காய்ச்சி வடிகட்டி தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்
பின்னர் ஒரு கடாயில் வெல்லப்பாகை ஊற்றி கொதிக்க வைக்கவும். இதனுடன் அரைத்து வைத்துள்ள பலா சுளையையும் உடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்
ஜவ்வரிசியை குக்கரில் தண்ணீர்விட்டு வேகவைத்து சேர்த்து கொள்ளுங்கள்
சிறிது கொதித்தவுடன் தேங்காய் பால் சேர்ககவும். இவை அனைத்தையும் நன்கு கொதிக்க விடவும்
வாணலியில் 2 ஸ்பூன்நெய்விட்டு முந்திரி,திராட்சை, கட் பண்ணிய தேங்காய் சேர்த்து வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்
மீதமுள்ள நெய்யை கடைசியில் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது சுவையான பலாப்பழ பாயாசம் ரெடி
சிம்பிளாக செய்யக்கூடிய இந்த பலாப்பழ பாயாசத்தை ட்ரை பண்ணுங்கள். உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ரெசிபிகளில் ஒன்றாகவும் நிச்சயம் இருக்கும்
தக்காளி நம் சரும பளபளப்பிற்கு எப்படி உதவும் என்று பாருங்க!