இனிப்பு பிடிக்குமா? வீட்டில் இப்படி ஸ்வீட் பப்ஸ் செய்வது சாப்பிடுங்க!

By Marimuthu M
May 13, 2025

Hindustan Times
Tamil

ஸ்வீட் பப்ஸ் செய்யத் தேவையான பொருட்கள்: பொறி (Puffed Rice) – 2 கப், வெல்லம் – 1 கப் (தூள் வடிவம் சிறந்தது), தண்ணீர் – கால் கப், ஏலக்காய் பொடி – கால் டீஸ்பூன், நெய் – 1 டீஸ்பூன், வறுத்த முந்திரி மற்றும் பாதாம் துண்டுகள் – அலங்கரிக்க

பப்ஸ் தயாரிக்க: மைதா - 3 கப், நெய் - 2 மேசைக்கரண்டி, நீர் - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு

ஸ்வீட் பப்ஸ் செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து சூடேற்றவும். வெல்லம் முழுமையாக கரைந்ததும், வடிகட்டிய பாகுவை மீண்டும் அடுப்பில் வைத்து கட்டியாகும் நிலை வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.சிறிது பாகுவை ஒரு கப் தண்ணீரில் விடும்போது, அது தட்டில் மோதும் நிலையில் இருந்தால் சரியான பாகு என அர்த்தம்.

பாகு தயாரானதும், அதில் ஏலக்காய்ப் பொடி, நெய், பொறியைச் சேர்த்து நன்கு கிளறவும். பாகு கைகளில் ஒட்டாமல் இருக்கும்போது முந்திரி அல்லது பாதாம் துண்டுகளை போட்டு பார்ப்பதற்கு பூரண வடிவில் செய்யலாம்.

அடுத்து, மைதாவில் சிறிது உப்புடன் நீர் சேர்த்து மென்மையாகப் பிசையவும். அதன்மேல் நெய் தடவி, 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். 

பிசைந்து வைத்திருந்த மைதாவை, பூரணம் செய்து, அதில் இந்த பாகு மற்றும் பொறி கலந்த கலவையைக் கலக்கவும். பின்னர், எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.இல்லையேல்,ஒரு மின் அடுப்பில் வைத்து 15 நிமிடங்கள் சுட்டு எடுக்கவும்.  

இந்த ஸ்வீட் பப்ஸில் இருக்கும் வெல்லத்தினால், இரத்தம் சுத்தியாக்கும் தன்மை மற்றும் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். குறைந்த கலோரி உணவு எளிதில் ஜூரணம் ஆகும் தன்மைகொண்டது.

மன அழுத்தத்தைக் குறைக்க 5 எளிதான யோகாசனங்கள்