முள்ளங்கி சட்னி எப்படி செய்வது

By Divya Sekar
Nov 05, 2023

Hindustan Times
Tamil

தேவையான பொருட்கள்

முள்ளங்கி-2 கடலைப்பருப்பு- 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு- 1 டேபிள்ஸ்பூன் சின்ன வெங்காயம்- 10

பூண்டு-‌ 4 பல் இஞ்சி- சிறிதளவு வரமிளகாய்- காரத்திற்கு ஏற்ப தக்காளி- 3 தேங்காய்- 1 மூடி

செய்முறை

முதலில் வாணலியில் கடலை பருப்பு, உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். 

பின் அதில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி அதனுடன் சிறிதாக நறுக்கிய முள்ளிங்கியை சேர்த்து வதக்கவும்.

பின், அடுப்பை அணைத்து துருவிய தேங்காயை சேர்த்து கிளறவும். இக்கலவை ஆறியவுடன் மிக்சியில் அரைத்து தாளிக்கவும்.

இப்போது சுவையான முள்ளங்கி சட்னி ரெடி

மிதுனத்தில் நுழையும் குரு! இந்த 5 ராசிகளை இனி கையில் பிடிக்கவே முடியாது! பணமழை கொட்டும் ராசிகள்!