வீட்டிலேயே எளிமையாக பீட்சா செய்வது எப்படி என்பது குறித்து அறிந்துகொள்வோமா?

By Marimuthu M
May 08, 2025

Hindustan Times
Tamil

ஒரு கப்பில் மைதா அல்லது கோதுமை மாவு, சிறிது உப்பு, சிறிது சக்கரை, கொஞ்சம் ஈஸ்ட் மற்றும் வெந்நீர் சேர்த்து பிசையவும். அதன்பின், மூடி 1 மணி நேரம் பதப்படுத்தவும்.

2 தக்காளியை அரைத்து, அதில் பூண்டு விழுது, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சிறிது எண்ணெயில் வதக்கி பீட்சா சாஸ் செய்யவும்.

பதமாக இருந்த மாவை உருட்டி, பீட்சா தட்டில் வைக்கவும்.

மாவின் மேல் தயார் செய்த சாஸை நன்கு பரப்பிவிடவும்.

மேலே வெங்காயம், மிளகாய், தக்காளி துண்டுகள், மற்றும் சீஸ் ஆகியவற்றை மேலே தூவவும்.

அதன்பின், 180°C-ல் காயவைத்த ஓவெனில் 15–20 நிமிடங்கள் வரை சீஸ் உருகும் வரை வேகவைக்கவும். ஓவென் இல்லையெனில் தடிமான பாத்திரத்தில் மூடி சாதாரண அடுப்பிலும் வேகவைக்கலாம்.

வெந்த பீட்சாவை வெட்டி, சூடாக பரிமாறவும். மேலே சிறிது கற்பூரவள்ளி பொடியினை தூவிவிட்டால், சுவை கூடலாம்.

மே 24ம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்காரர்களுக்கு இன்று என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.