வீட்டிலேயே மஃபின் செய்வது எப்படி என அறிந்து கொள்ளலாமா?

By Marimuthu M
May 07, 2025

Hindustan Times
Tamil

மஃபின் செய்யத்தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1 கப், சர்க்கரை – அரை கப், பால் – அரை கப், எண்ணெய் – கால் கப், பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன், வெணிலா எஸன்ஸ் – அரை டீஸ்பூன்,  முட்டை – 1 (விருப்பமெனில்)

மஃபின் செய்முறை: கோதுமை மாவு மற்றும் பேக்கிங் பவுடரை ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து வைக்கவும்.

பால்,எண்ணெய், முட்டை மற்றும் வெண்ணிலா எஸன்ஸ் ஆகியவற்றை வேறு பாத்திரத்தில் கலந்து எடுக்கவும்

மாவு கலவையில், திரவ கலவையை மெதுவாக சேர்த்து கிளறவும். கொஞ்சம் தடிமனாக இருக்கவேண்டும்.

மஃபின் கப்புகளில் மாவை பாதி அளவு ஊற்றவும். மேலே வெல்லம் தூள் அல்லது சாக்லேட் சிப்ஸ் சேர்த்துக்கொள்ளலாம்.

180°C-இல் முன்பே காயவைத்த ஓவெனில் 20 நிமிடங்கள் மேல் சிவக்கும்வரை வேகவைக்கவும். ஓவென் இல்லையென்றால், எலக்ட்ரிக் அடுப்பில், பேனில் 15 நிமிடம் வரை வேகவைக்கவும். 

வெந்ததும் வெளியே எடுத்து சில நிமிடம் குளிரவைத்து, பிறகு பரிமாறவும். சுவையான மஃபின் ரெடி!

ஆர்த்தி - ஜெயம்ரவி பிரிவிற்கு கெனிஷாதான் காரணம் என ஆர்த்தி கூறிய நிலையில் கெனிஷாவிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளன