எளிமையான வெயிலுக்கு உகந்த மோர்க் குழம்பு செய்முறை எப்படி என தெரியுமா?

By Marimuthu M
Apr 27, 2025

Hindustan Times
Tamil

மோர்க் குழம்பு செய்யத்தேவையான பொருட்கள்  (நான்கு பேருக்காக): தயிர் – 2 கப் (சற்று புளிக்கத் தொடங்கியதும் எடுப்பது நல்லது), தண்ணீர் – 1 கப் (மோர் ஆக்க),  வெங்காயம் (விருப்பப்படி) – 1 (நறுக்கியது),  காய்கறி (விருப்பப்படி) – பூசணி, சுரைக்காய், பட்டாணி, முள்ளங்கி முதலானவை – 1 கப் வரை, மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, தேங்காய் துருவல் – கால் கப்,

மோர்க் குழம்பு செய்யத்தேவையான பொருட்கள்  (நான்கு பேருக்காக): சீரகம் – 1 டீஸ்பூன்,  பச்சைமிளகாய் – 2,  இஞ்சி – சிறிய துண்டு,  எண்ணெய் – 1 மேசைக்கரண்டி,  கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன்,  கறிவேப்பிலை – சில இலைகள்,  உலர்ந்த மிளகாய் – 1, சின்ன வெங்காயம் – 2 (விருப்பப்படி)

மோர்க்குழம்பு செய்முறை: - தயிரை நன்கு கெட்டியாக இல்லாமல் நீர் சேர்த்து மோர் போல் ஆக்கிக்கொள்ளவும். தேங்காய், சீரகம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் காய்கறிகளை சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சமைக்கவும்.வேகவைத்த காய்களில் அரைத்த விழுதை 2 - 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடுப்பில் தீயை குறைத்து தயிர் கலவையை ஊற்றவும்.

குழம்பில் தயிர் சேர்த்தபின் அதிகமாக கொதிக்க விடக்கூடாது. ஏனெனில், தயிர் தி்ரிந்து போகும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றவும்.

 அதோடு ஒரு உருளைக்கிழங்கு வறுவல் சேர்த்தால் மோர்க்குழம்பு ரொம்ப செமையாக இருக்கும்.

வாயில் வைத்ததும் கரையும் தித்திக்கும் வேர்கடலை ரவை லட்டு.. செம டேஸ்ட்!