கொங்கு நாட்டு ஸ்டைலில் கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?

By Marimuthu M
Apr 30, 2025

Hindustan Times
Tamil

கொங்கு நாட்டு ஸ்டைலில் கருவாட்டு குழம்பு செய்யத்தேவையான பொருட்கள்: - கருவாடு – 10 துண்டுகள், - சின்ன வெங்காயம் – 10 (அல்லது 2 பெரிய வெங்காயம்), - தக்காளி – 2 (நறுக்கி வைக்கவும்), - பூண்டு பல் – 8, - இஞ்சி – சிறிய துண்டு (அல்லது விழுது 1 மேசைக்கரண்டி), - மஞ்சள்தூள் – 1/4 மேசைக்கரண்டி, - மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி, - மல்லித்தூள் – 1.5 மேசைக்கரண்டி,

கொங்கு நாட்டு ஸ்டைலில் கருவாட்டு குழம்பு செய்யத்தேவையான பொருட்கள்: - புளி – எலுமிச்சை அளவு (1 கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்) - வெந்தயம் – 1/4 மேசைக்கரண்டி, - கடுகு – 1/2 மேசைக்கரண்டி, - நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி, - கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, - உப்பு – தேவைக்கேற்ப, - கொத்தமல்லி இலை – அலங்கரிக்க

கொங்கு நாட்டு ஸ்டைலில் கருவாட்டு குழம்பு செய்முறை: - கருவாட்டை நீரில் சுத்தம் செய்து, மஞ்சள்தூள் மற்றும் சிறிது எண்ணெயுடன் வாணலியில் லேசாக வறுக்கவும். வாசனை குறையும்.

- ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

- தக்காளி சேர்த்து நன்கு மசிய விடவும். பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,மல்லித்தூள் சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

- புளி கரைத்த நீரைச் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு வறுத்த கருவாட்டை சேர்த்து, குறைந்த தீயில் 10–15 நிமிடங்கள் நன்கு ஊறவைக்கவும்.

- குழம்பு சற்று கெட்டியாகி, எண்ணெய் மேல் மிதக்கும் நிலையில் வந்ததும், கொத்தமல்லி இலை தூவி, அடுப்பை அணைக்கவும்

குரு மிதுன ராசியில் நுழைந்து கொடுமையான பலன்களை கொடுக்கும் ராசிகள் 

Canva